தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிவிப்பில்,
*தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏடிஜிபியாக இருந்து டிஜிபியாக பால நாக தேவி பதவி உயர்வு பெற்றார்.
* பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சந்தோஷ் குமாருக்கு பொருளாதார ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
* ஐஜி ரூபேஷ் குமார் மீனா குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
