பிரதமர் மோடியின் வீடியோ ஏன் நீக்கப்பட்டது?… Meta கொடுத்த விளக்கம்!

Estimated read time 1 min read

டெல்லி : சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ ஃபேஸ்புக் (Facebook) தளத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட விவகாரமானது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடியோ முடக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்களை அடுத்து, மெட்டா (Meta) நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “தொழில்நுட்பக் கோளாறு (Technical Glitch) காரணமாகவே பிரதமர் மோடி ஃபேஸ்புக்கில் பதிவு செய்த வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது,” என்று கூறி அந்நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது. மேலும், தவறுதலாக நீக்கப்பட்ட பிரதமரின் அந்த வீடியோ தற்போது மீண்டும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் மெட்டா தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் வீடியோ முடக்கப்பட்ட இந்தச் சம்பவம் வெறும் தொழில்நுட்பக் கோளாறுடன் நின்றுவிடவில்லை. இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து முழுமையாக ஆராயவும், நேரில் விளக்கம் அளிக்கக் கோரியும் மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய (சர்வதேச) தலைவர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) இந்த அதிரடி சம்மனை அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் உயரிய தலைவர் ஒருவரின் அதிகாரப்பூர்வப் பதிவு திடீரென முடக்கப்பட்ட இந்த விவகாரத்தை ஒரு சாதாரண தொழில்நுட்பப் பிழையாகக் கருதாமல், இதன் மீது மிகப்பெரிய அளவிலான தீவிர விசாரணைக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

More From Author