பல நாடுகளின் செய்திஊடகங்கள் அண்மையில் தொடர்ந்து வெளியிட்ட செய்திகளின் படி, திறந்த மூலநிரல் மாதிரிகள், அறிவியல் தொழில் நுட்பப் பயன்பாடு மற்றும் திறன் கட்டுமானம் முதலியவற்றில் சீனா மேற்கொண்ட பயனுள்ள நடவடிக்கைகள், உலகின் தெற்குலக நாடுகள் சமத்துவ முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களைப் பெறுவது, உலகின் ஆட்சி முறையில் பங்கெடுப்பது, எண்ணியல்மயமாக்க மேம்பாட்டை விரைவுபடுத்துவது ஆகியவற்றுக்கு மேலதிகமான வாய்ப்புக்களைக் கொண்டு வரும்.
சீன மற்றும் மேலை நாடுகளின் செயற்கை நுண்ணறிவு ஆட்சி முறையின் ஒப்பீடு என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்று ஐரோப்பிய மார்டன் டிப்ளோ எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரையின்படி, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கான அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் ஏகபோகவணிகத்தை துண்டிக்கும் சீனாவின் முயற்சிக்கு உலகின் தெற்குலக நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. செலவு குறைந்த, அதிக திறன் ஆற்றல் கொண்ட சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம் மீதான தெற்குலக நாடுகளின் தேவையே இத்தகைய மனப்பான்மைக்கு காரணமாகும். பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கித் தலைவர் தில்மா ரூசெஃப் ஷாங்காய் மாநகரில் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்துகொண்ட போது கூறுகையில்,
உயர் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் உலகளவில் நியாயமற்ற நிலைமை மேலும் தீவிரமாக்காமல் தவிர்க்கும் வகையில், வளரும் நாடுகளுக்கிடையில் மேலும் நியாயமான, நெருக்கமான ஒத்துழைப்புறவை உருவாக்க வேண்டும் என்றார்.
