இவ்வாண்டின் 10 ஆயிரமாவது சீன இரயில்வே எக்ஸ்பிரஸ் சேவை

இவ்வாண்டின் 10 ஆயிரமாவது சீன இரயில்வே எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி அண்மையில் சீனாவின் வூ ஹானிலிருந்து ஐரோப்பாவுக்குப் புறப்பட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியேன் கூறுகையில்,

இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து இது வரை, 10 ஆயிரம் சீன இரயில்வே எக்ஸ்பிரஸ் பயணித்துள்ளன. இதன் மூலம் 10 லட்சத்துக்கு அதிகமான கொள்கலன்களான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 11 விழுக்காடு அதிகமாகும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது வரை சீன இரயில்வே எக்ஸ்பிரஸ் ஐரோப்பாவின் 25 நாடுகளின் 224 நகரங்களைச் சென்றடைந்ததுடன், ஆசியாவின் 11 நாடுகளின் நூற்றுக்கும் அதிகமான நகரங்களுடனும் இணைந்துள்ளது. சர்வதேச வர்த்தகம், வினியோக சங்கிலிச் சேவை ஆகிய துறைகளில் ஈடுபடும் அதிகமான தொழில் நிறுவனங்கள் இந்த ரயில்வே எக்ஸ்பிரஸ் பயணிக்கும் வழிகளின் நெடுகிலும் நிறுவப்பட்டுள்ளன.

வேகமான, தரமான, பாதுகாப்பான போக்குவரத்து மேம்பாட்டைச் சார்ந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்துக்கான சின்னமாக சீன இரயில்வே எக்ஸ்பிரஸ் மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author