சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் வெளிநாடுகளிலுள்ள சீனர்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து வெளியிட்ட உத்தரவில்,
புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய சிந்தனையை வழிகாட்டலாக கொண்டு, வெளிநாடுகளிலுள்ள சீனர்கள் தொடர்பான விவகாரங்களுக்கான கட்சியின் கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தி, வெளிநாடுகளிலுள்ள சீனர்களின் வலிமையை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கல் மூலம் வலிமையான நாட்டின் கட்டுமானத்தையும், தேசத்தின் மறுமலர்ச்சியையும் முன்னெடுக்கும் வகையில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள சீனர்களின் ஒற்றுமையையும் முயற்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வெளிநாடுகளிலுள்ள சீனர்கள் விவகாரம் பற்றிய தேசிய பணிக்கூட்டம் ஜுலை 27 மற்றும் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உத்தரவு வெளியிடப்பட்டது.
