சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 28ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்லோவாக்கிய அரசுத் தலைவர் பீட்டர் பெல்லெக்ரினியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
நூறு ஆண்டுகாலத்தில் இல்லாத மாற்றங்கள் வேகமாக ஏற்பட்டு வருகின்றன. சீன-ஐரோப்பிய உறவு புதிய, முக்கிய வளர்ச்சி வாய்ப்புகளை மட்டுமல்லாமல் சில அறைகூவல்களையும் எதிர்நோக்குகிறது. சீன-ஐரோப்பிய ஒன்றிய ஒத்த கருத்துகளிலும் சர்ச்சைகளை சரியாகக் கையாள்வதிலும் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்துவதை முன்னேற்றி, சீன-ஐரோப்பிய உறவின் சீரான, நிதானமான வளர்ச்சியைத் தூண்டுவதில் ஸ்லோவாக்கியா ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்று சீன தரப்பு விரும்புவதாக தெரிவித்தார்.
பீட்டர் பெல்லெக்ரினி கூறுகையில்,
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில் சீனா பெற்றுள்ள வளர்ச்சிச் சாதனைகளை ஸ்லோவாக்கியா வெகுவாகப் பாராட்டுவதாக என்றார். ஒரே சீனா எனும் கொள்கையை உறுதியாகப் பின்பற்றும் ஸ்லோவாக்கியா, சீனாவுடன் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒத்துழைப்புகளை மேம்படுத்தி, நட்புறவை ஆழமாக்கவும், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் மேலதிகமான ஒத்துழைப்புச் சாதனைகளைப் பெறவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
