‘Sora’வை மூடியது OpenAI: என்ன காரணம்?  

Estimated read time 1 min read

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘Sora’ வீடியோ உருவாக்கும் தளத்தை மூடுவதாக ஓபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெவலப்பர் தயாரிப்புகள் மற்றும் சாட்ஜிபிடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இனி வீடியோ உருவாக்கும் சேவை கிடைக்காது.
பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி, ஓபன்ஏஐ-யில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது.
இதன் மூலம் மார்வெல் மற்றும் ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களை ஏஐ வீடியோக்களில் பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், டிஸ்னி உடனான சந்திப்பு முடிந்த அடுத்த 30 நிமிடங்களில் சோராவை மூடும் முடிவை ஓபன்ஏஐ எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author