இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Estimated read time 0 min read

புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட ஏனாம் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏனாமில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோல, பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடனும் தூறலுடனும் வானிலை நிலவி வருவதால், புதுச்சேரியைப் போலத் தங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும் பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து மழைநீடிக்கும் பட்சத்தில் நிலைமையைக் கண்காணித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author