டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை அலுவலகத்தைக் காலி செய்ய நோட்டீஸ்  

Estimated read time 1 min read

இந்தியத் தலைநகர் டெல்லியில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை அலுவலகமான ’24 அக்பர் ரோடு’ மற்றும் ‘5 ரைசினா ரோடு’ ஆகிய இரண்டு முக்கியக் கட்டிடங்களையும் காலி செய்ய மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு வழங்கியுள்ள இந்த வெளியேற்ற நோட்டீஸில், வரும் மார்ச் 28, 2026-க்குள் இரண்டு அலுவலகங்களையும் காலி செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பே இந்த நோட்டீஸ் கிடைத்ததை அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author