அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா, அமேசான் போன்ற ஜாம்பவான்களைக் குறிவைத்து டிஜிட்டல் சேவை வரி விதிக்கத் திட்டமிட்டு வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் மீது டிஜிட்டல் வரி விதிக்கும் எந்தவொரு நாட்டின் ஏற்றுமதிப் பொருட்கள் மீதும் உடனடியாக 100 சதவீதம் சுங்கவரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே கடந்த மே மாதம்தான் பெரும்பாலான ஏற்றுமதி பொருட்களுக்கான சுங்கவரியை 15 சதவீதமாகக் கட்டுப்படுத்தும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
அதற்குள் டிரம்பின் இந்த புதிய அதிரடி அறிவிப்பு அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையே மீண்டும் ஒரு உலகளாவிய வர்த்தகப் போரை மூட்டியுள்ளது.
அமெரிக்கா – ஐரோப்பா இடையே புதிய வர்த்தகப் போர்? டிஜிட்டல் வரிக்கு எதிராக 100% சுங்கவரி விதிக்க டிரம்ப் எச்சரிக்கை
