கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

Estimated read time 0 min read

கிருஷ்ணகிரி–பெங்களூரு நெடுஞ்சாலை பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீரப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முழுமையாகச் சுங்கக் கட்டணம் வசூலித்த போதிலும், சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும்,

ஓசூர் ஜி.ஆர்.டி மேம்பாலப் பழுது மற்றும் பதளப்பள்ளி போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதாகவும் ஓசூரைச் சேர்ந்த பி. சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் ஆர். ராஜா தலைமையிலான அமர்வு, சுங்கக் கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு வாகன ஓட்டியும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோரே என்றும்,

பழுதுபார்க்கப்படாத ஆபத்தான சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது சேவைக்குறைபாடு மற்றும் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை எனவும் தெரிவித்து,

தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்ததாரருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

You May Also Like

More From Author