சென்னை புறவழிச்சாலை 5ஆம் கட்ட டெண்டர் ரத்து

Estimated read time 1 min read

சிங்கப்பெருமாள் கோவில் – பூஞ்சேரி இடையிலான 10 வழிச் சாலைப் பணிக்கான டெண்டரை, நிர்வாகக் காரணங்கள் எனக் கூறி ரத்து செய்தது தவெக அரசு.

Image

சென்னை புறவழிச்சாலைத் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் இறுதிக் கட்டமான சிங்கபெருமாள் கோயில் முதல் பூஞ்சேரி வரையிலான பகுதிக்கான டெண்டர்களை நிர்வாகக் காரணங்களைக் காட்டி ரத்து செய்துள்ளது. இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு ரூ.12,000 கோடிக்கு மேல் ஆகும். நடப்பு நிதியாண்டில் அரசு மேலும் ரூ.3,540 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. திமுக ஆட்சியில் எண்ணுார் அருகே காட்டுபள்ளி துறைமுகம் முதல் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி வரை, 132 கி.மீ.,க்கு எல்லைச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது.

Image

சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டத்தின் இறுதிக்கட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் பூஞ்சேரி இடையே 10 வழிச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை (tender) தவெக அரசு ரத்து செய்துள்ளது. நிர்வாகக் காரணங்களைக் குறிப்பிட்டு இந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது. தவெக அரசு பதவியேற்று 4 மாதங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது.

You May Also Like

More From Author