பாலிவுட் இயக்குனர் ஆதித்ய தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படம், இந்தியத் திரையுலகின் முந்தைய வசூல் சாதனைகளை தவுடுபொடியாக்கி வருகிறது.
வெளியான 6 நாட்களில் உலக அளவில் ₹919 கோடி வசூல் செய்து, விரைவில் ₹1000 கோடி மைல்கல்லை எட்டவுள்ளது.
கடந்த மார்ச் 19 அன்று வெளியான இந்தப் படம், ஷாருக்கானின் ‘ஜவான்’ மற்றும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ ஆகிய படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் (நான்கு நாட்களில்) ₹400 கோடி வசூல் செய்த முதல் ஹிந்திப் படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
6 நாட்களில் Rs.919 கோடி வசூல்;உலக அளவில் சாதனை படைக்கும் ‘துரந்தர் 2’
