திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா

Estimated read time 1 min read

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி உற்சவப் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த 23-ம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 3-ம் தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகமும், 4-ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், முருகப்பெருமான், வெள்ளி பூத வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author