கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ள அச்சன்கோவில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மஹோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டிற்கான மண்டல மஹோற்சவ விழா காலைக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாகக் கோவிலுக்குரிய திருவாபரணங்கள் கேரள மாநிலம் புனலூர் கருவூலத்தில் இருந்து தென்காசி வழியாகக் கொண்டு வரப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
பின்னர்சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் அர்ச்சகர்கள் கொடியை ஏற்றினார்கள். அதன்பின் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனையில திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
