மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தினிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை சால்வாடிரா நகரில் நடந்துள்ளது. இனந்தெரியாத கும்பல் ஒன்று நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இறந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள். தாக்குதலுக்கான காரணம் தெளிவாக இல்லை. குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். குவானாஜுவாடோ மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல் தொடர்பான கொலைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
