வாக்காளர் பட்டியல் 2026: பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் – விடுபட்டவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!  

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் தங்களது வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்கான முக்கியமான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தலில் வாக்களிக்க விரும்பும் ஒவ்வொருவரும், தங்களது தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும். இதற்காக தேர்தல் கமிஷனின் ‘இ.சி.ஐ.நெட்’ என்ற செயலியைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தற்போது ஒரு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 26) கடைசித் தேதியாகும்.
இறுதி நாளான இன்று விண்ணப்பிக்கத் தவறுபவர்கள், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எக்காரணம் கொண்டும் வாக்களிக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author