சீனாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2025ம் ஆண்டின் பொறுப்பு, உலகளவில் வெளிக்காட்டப்பட்டது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த தூதாண்மை, மாறி வரும் உலக நிலைமையில் நியாயம் மற்றும் நீதியை நாடி, மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு விவேகம் வழங்கி, உலகின் நிர்வாக மேம்பாட்டுக்கு வழிகாட்டியுள்ளது.
இவ்வாண்டில் ஷிச்சின்பிங்கின் தூதாண்மை நடவடிக்கைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. சீனாவுடன் இணைந்து பயணிப்பது, வாய்ப்புகளுடன் பயணிப்பதைக் குறிக்கிறது. சீனாவை நம்புவது, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைப்பதைக் குறிக்கிறது. சீனாவில் முதலீடு செய்வது, எதிர்காலத்துக்கு முதலீடு செய்வதைக் குறிக்கிறது என்று பல நாடுகள் கருதுகின்றன. சீனா வல்லரசின் பொறுப்பேற்று, நியாய பாதையில் நடைபோடுவதற்கு, சர்வதேச சமூகத்தின் முன்போக்கு சக்திகள் ஒப்புதல் தெரிவித்தன.
