அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ 26ஆம் நாள் பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி 7 நாடுகள் குழு வெளியுறவு அமைச்சர் கூட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலான பேச்சுவார்த்தை முன்னேற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இருந்த போதிலும், இது அதிகமான மாற்றங்களை எதிர்நோக்கியிருப்பதால் இப்பேச்சுவார்த்தையின் விரிவான தகவல்களை வெளியிடபோவதில்லை என்று குறிப்பிட்டார்.
இதனிடையே அதே நாளன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப், தொடர்புடைய முக்கியத் தலைவர்களுடன் சாராம்ச ரீதியில் உரையாடல் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
முன்னதாக இது பற்றிக் கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி 25ஆம் நாள் கூறுகையில், கடந்த சில நாட்களாக, நட்பார்ந்த நாடுகளின் வழி ஈரான், அமெரிக்காவுக்கு தனது நிலைபாட்டை வெளிக்காட்டியுள்ளதாகவும், இது பேச்சுவார்த்தை அல்லது உரையாடல் அல்ல. தகவல் பரிமாற்றம் மட்டுமே என்றும் கூறினார்.
