ஜூலை திங்கள் இறுதி வரை, ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளூர் நிறுவனங்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியது.
பதிவு செய்யப்பட்ட ஹாங்காங் சாராத நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் அதிகம். இவ்விரு எண்ணிக்கைகளும் வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என்று ஹாங்காங் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி ஜான் லீகாஜூ 10ஆம் நாள் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் இவ்வாண்டின் ஜூலை திங்கள் வரை, 17 ஆயிரத்து 400 கோடி ஹாங்காங் டாலர் நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 19 ஆயிரத்திற்கு மேலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதே நாளில், சமூக ஊடகத்தில் தனது ஆட்சிமுறை பற்றிய குறும்படம் ஒன்றை அவர் வெளியிட்டார்.
இதில் அவர் கூறுகையில்,
உலகளவில் ஈட்டிணையற்ற ஏற்றுமதி மற்றும் இரக்குமதி மேடை மற்றும் மேம்பாடுகளை ஹாங்காங் கொண்டுள்ளது. எதிர்காலத்தில், புதிய வளரும் உள்ளார்ந்த ஆற்றல் வாய்ந்த சந்தைகளை வளர்த்து, ஹாங்காங் மற்றும் உள்பிரதேசத்தின் நிறுவனங்களுக்கு வணிக வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்கி, புவிசார் அரசியல் அறைகூவல்களைச் சமாளிக்கும் வகையில் முதலீடு கட்டமைப்பைச் சரிப்படுத்தும் என்றார்.