போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் முழு அமர்வில் உரைநிகழ்த்திய ஜாவ் லெஜி

சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி, 26ஆம் நாள் ஹைனான் மாகாணத்தில் நடைபெற்ற போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் முழு அமர்வில் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங், இலங்கை நாடாளுமன்றத் தலைவர் ஜகத் விக்ரமரத்ன உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல், வணிகம், சிந்தனைக் குழுக்கள் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த மனிதகுலப் பொதுச் சமூகத்தை உருவாக்கும் கருத்தம், உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பு, நாகரிகம், ஆட்சி முறை ஆகிய நான்கு முன்மொழிகளும், உலக நூற்றாண்டின் மாற்றங்களைக் கையாள்வதற்கு வழிவகுத்துள்ளன என்று ஜாவ் லெஜி வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், சீனா எப்போதும் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தி வரும் அதே வேளையில், பொதுவான வளர்ச்சிக்காக அனைத்து நாடுகளையும் ஊக்குவித்து வருகிறது என்றும், அனைத்து நாடுகளின் நிறுவனங்களும் சீனச் சந்தையில் முதலீடு செய்து, தங்கள் வளர்ச்சியை ஆராய்ந்து ஆழப்படுத்திக் கொள்வதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இம்மன்றக் கவுன்சிலின் தலைவர் பான் கி மூன் வரவேற்புரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author