லஷ்மி நாராயணப் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தர வரத லஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலில் இன்று பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் மற்றும் சேர்த்தி சேவை நடைபெற்றது.

இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முன்னதாக மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு கல்யாண சீர்வரிசை எடுத்து வந்து திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது. பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author