விரைவில் முடிவுக்கு வரும் போர்… ட்ரம்ப் அறிவிப்பு

Estimated read time 1 min read

ஈரானுடனான போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, ஈரான் தன் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணையை கச்சா எண்ணெய் கப்பல்கள் கடக்க தடை விதித்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் ஈரானுடனான போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திறனை முடக்குவதே தங்களது முதன்மை இலக்கு என்றும், அந்த இலக்கு எட்டப்பட்டவுடன் எவ்வித ஒப்பந்தமும் இன்றி அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்றும் அவர் கூறினார். ஈரானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை மிகவும் நிதானமாகச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறையும் என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author