தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து தனது இரண்டாவது தொகுதியான திருச்சி கிழக்கில் இன்று (ஏப்ரல் 2) அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த விஜய், மாநகராட்சி இரண்டாவது மண்டலக் குழு அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது மனுவை ஒப்படைத்தார்.
ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தைத் தொடங்கியிருந்த நிலையில், தற்போது திருச்சியிலும் அவர் கோதாவில் குதித்திருப்பது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்
