மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: விழாக்கோ  

Estimated read time 1 min read

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘திருக்கல்யாணம்’, இன்று (மே 8) காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதையொட்டி மதுரை நகரம் முழுவதும் பண்டிகை போல் மின்னுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபோகத்தை காணக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு போக்குவரத்து மாற்றங்களும், பார்க்கிங் வசதிகளும் மதுரை மாநகராட்சி சார்பாகவும், கோவில் நிர்வாக குழு சார்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. அனுமதி சீட்டுடன் வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
பக்தர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறும் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author