Chat GPT மூலம் போலி புத்தகங்கள்! வெளியானது லஞ்ச ஒழிப்புத்துறையின் FIR

Estimated read time 1 min read

அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து 1,857 புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.

கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த FIR எஃப்.ஐ.ஆர். வெளியானது. அதில் புத்தக பரிந்துரைக்குழு 26,000 நூல்களை கொள்முதல் செய்ய ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பரிந்துரை செய்தது. அரசு நூலகங்களுக்கு நூல் கொள்முதல் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தக பட்டியல் சரிபார்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. புத்தக பரிந்துரைக் குழு பரிந்துரை செய்யாத நூல்களை ஒருங்கிணைப்புக் குழு கூடுதலாக சேர்த்துள்ளது

Chat GPT மூலம் போலி புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து 1,857 புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 2026 பிப்ரவரி மாதம் புத்தகங்கள் பெறப்பட்ட நிலையில் மார்ச் மாதம் முதல் பணப்பட்டுவாடா நடந்ததாக எஃப்.ஐ.ஆரில் பதிவு; மோசடி தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author