எகிப்து முன்னாள் தலைமை அமைச்சர் எசாம் ஷராஃப் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
சீனாவில் முதன்முறையாக தான் 2005ம் ஆண்டில் பயணம் மேற்கொண்டிருந்ததை குறிப்பிட்ட அவர், தற்போதைய சீனா, 2005ம் ஆண்டை விட, மேலும் நவீனமயமாகவும் தொடர்ந்து வளர்ச்சியும் பெற்று வருகிறது. உயர்நிலை வளர்ச்சி, பண்பாட்டின் பரவல் ஆகியவற்றுக்கிடையில் சரிசம நிலையை நிலைநிறுத்தும் சீனா, உயிரோட்ட நாகரிகம் ஆகும். சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம், சீனப் பண்பாடு மற்றும் மதிப்புக்குரிய கருத்துகளிலிருந்து உருவாகியது. அதனால், அது அனைவருக்கும் நன்மை தருகிறது. சீன மக்கள், மனம் ஒருமித்து, சுமுக முறையில் பழகிக் கொள்ளும் வேளையில், சீன சமூகம் நிதானமாகவும் ஒற்றுமையாகவும் வளர்ந்து வருகிறது. சீனாவின் நவீனமயமாக்கக் கருத்து, முன்மொழிவுகள் மூலம் உலகிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு மூலம், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுத் துறையில் எகிப்து நலன்களைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் இரு நாடுகள்,மனித தொடர்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.