இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு 10.29 பில்லியன் டாலர் சரிவு  

Estimated read time 0 min read

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.288 பில்லியன் டாலர் சரிந்து, 688.058 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்திலும் கையிருப்பு 11.413 பில்லியன் டாலர் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 728.494 பில்லியன் டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டிருந்தது.
ஆனால், மேற்கு ஆசியாவில் வெடித்த போர்ச் சூழல் காரணமாகத் தற்போது இது படிப்படியாகக் குறைந்து வருகிறது.

You May Also Like

More From Author