தேஜாஸ் என்ஜின் விநியோகத்தில் தாமதம்: ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு ஹெச்ஏஎல் அபராதம்  

Estimated read time 1 min read

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்), அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்குத் தேஜாஸ் போர் விமானங்களுக்கான எப்404 (F404-IN20) என்ஜின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்காக அபராதம் விதித்துள்ளது.
ஒப்பந்தத்தின்படி, என்ஜின் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால் ‘லிக்விடேட்டட் டேமேஜஸ்’ (Liquidated Damages) என்ற பிரிவின் கீழ் அபராதம் விதிக்க ஹெச்ஏஎல்லிற்கு அதிகாரம் உள்ளது.
இதனை உறுதிப்படுத்திய ஹெச்ஏஎல் தலைவர் டி.கே.சுனில், இந்தத் தாமதம் இந்திய விமானப்படைக்கான தேஜாஸ் மார்க் 1ஏ விநியோக அட்டவணையைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author