தமிழகத்தில் ஏப்ரல் 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை முன்னறிவிப்பு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது சுமார் 0.9 கி.மீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (ஏப்ரல் 3) தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

You May Also Like

More From Author