27 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு; மேலூரில் மட்டும் இழுபறி ஏன்?  

Estimated read time 0 min read

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் தனது சொந்தத் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் களம் காண்கிறார்.
இந்தப் பட்டியலில் 12 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பொன்னேரியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஹசன் மௌலானா, காரைக்குடியில் மாங்குடி மற்றும் நாங்குநேரியில் ரூபி மனோகரன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
5 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author