மதுரை சித்திரைத் திருவிழா 2026: ஏப்ரல் 18ல் கொடியேற்றம்

Estimated read time 1 min read

மதுரையின் அடையாளமாகத் திகழும் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா, வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
இரண்டாம் நாளான ஏப்ரல் 20ல் பூத மற்றும் அன்ன வாகனத்திலும், ஏப்ரல் 21-ல் காமதேனு வாகனத்திலும் சுவாமி உலா வருவார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி நான்காம் நாள் திருவிழாவில், தங்கப் பல்லக்கில் அம்மனும் சுவாமியும் வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

You May Also Like

More From Author