திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில் அறிவித்துள்ளது.
பாரதப் பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் இந்திய இரயில்வேதுறை நவீன மயம் ஆக்கப்பட்டு வருகிறது. அதேபோல, வார இறுதி நாட்கள், சுதந்திரம் தினம், தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், சொந்த ஊர்களுக்குச் செல்வோர்களுக்கு ஏதுவாகவும் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் திருநெல்வேல் இருந்து மேட்டுப்பாளையத்திற்குபிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது. பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்குச் சிறப்பு இரயில் இயக்கப்பட்டும்.
மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் இருந்து இரவு 7.45 மணிக்குத் திருநெல்வேலிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த இரயில், பிப்ரவரி 5, 12, 19, 26, மார்ச் 4, 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.