ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) காங்கிரஸ் எம்பி சசி தரூர் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் ஒரு தனித்துவமான கலாச்சார வேறுபாடு குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆகஸ்ட் 16, 2025 அன்று இந்த பண்டிகையைக் கொண்டாடினாலும், கேரளா கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, செப்டம்பர் 14 அன்று, மலையாள நாட்காட்டியின்படி அதைக் கொண்டாடுகிறது.
இது குறித்து சமூக ஊடகங்களில் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய சசி தரூர், “நிச்சயமாக ஒரு பகவான் கூட ஆறு வார இடைவெளியில் இரண்டு வெவ்வேறு நாட்களில் பிறக்க முடியாது! எல்லாவற்றிற்கும் மேலாக, கேரள மக்கள் வெவ்வேறு கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதில்லை!” என்று குறிப்பிட்டார்.
கேரளாவில் மட்டும் ஒருமாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது ஏன்?
