சீனத் தேசிய தார்மீக நாகரிகக் கட்டுமானப் பணிகளுக்கான பரிசு வழங்குதல் மாநாடு மே 23ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இதில், தார்மீக நாகரிகப் பணிகளுக்கான அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வழிக்காட்டல் சிந்தனை வலியுறுத்தப்பட்டது.
பொருளாதார மற்றும் தார்மீக நாகரிகத்தின் இசைவான வளர்ச்சி, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்திற்கான முக்கியச் சின்னமாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டிற்குப் பிறகு, மக்களின் நாகரிகப் பண்பு மற்றும் சமூகத்தின் நாகரிக நிலை பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
நாகரிக முன்மாதிரி நபர்கள், குடும்பங்கள், நகரங்கள், கிராமங்கள் முதலியவற்றுக்கு இம்மாநாட்டில் பரிசுகள் வழங்கப்பட்டனர்.