முதற்கட்டமாக 2,500 டாஸ்மாக் கடைகள் தனியார் வசம்?

Estimated read time 1 min read

23 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் மொத்தமுள்ள 4,048 டாஸ்மாக் கடைகளில் முதற்கட்டமா 2,500 கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் இருந்த 4,765 கடைகளில், தவெக ஆட்சி, அதாவது விஜய் பதவியேற்றதும் கோவில், பள்ளி, பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த 717 கடைகளை மூட உத்தரவு போட்டார். இப்போது தமிழ்நாடு முழுக்க 4,048 சில்லறை கடைகள், 3,240 பார்கள் இயங்குகிறது. இதில் முதற்கட்டமாக 2,500 கடைகள் மட்டும் தனியார் மயமாக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள நகர்ப்புற கடைகள் மட்டும் முதலில் தனியார்மயமாக்கப்படவுள்ளன. இது நடந்தால் 2003-ல் ஜெயலலிதா அரசு டாஸ்மாக்கை அரசுடைமை ஆக்கிய பிறகு, 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனியார் மயம் என்ற வரலாற்று மாற்றமாக இருக்கும்.

கடந்த காலத்தில் பார் லைசென்ஸ், டிரான்ஸ்போர்ட் டெண்டர், பாட்டிலிங், கொள்முதல்-ல் ரூ.1,000 கோடி முறைகேடு, ஆண்டுக்கு ரூ.3,600 கோடி தனியார் கணக்குக்கு போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடைகளில் MRP-க்கு மேல ரூ.10-20 அதிகமா வசூல் பண்ணி அதுவே ‘பார்ட்டி ஃபண்ட்’ ஆக மாறியதாக தவெக குற்றம் சாட்டியது. அதனால் வருவாய் கசிவை அடைக்க, ஊழலை ஒழிக்க அரசே சரக்கு விற்பதை விட, தனியாருக்கு கொடுத்து கண்டிப்பான கட்டுப்பாட்டில் வைக்கலாம் என தவெக அரசு முடிவு செய்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author