ஏப்ரல் 9 முதல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு  

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களின் மனநிலையைத் திசைதிருப்பும் வகையில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனநாயகத் திருவிழாவின் வெளிப்படைத்தன்மையையும், நேர்மையையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Polls) நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் இந்தியத் தேர்தல் ஆணையம் முழுமையான தடை விதித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author