ஹூவாங்யேன் தீவு ஃபிலிப்பைன்ஸின் உரிமைப் பிரதேசம் இல்லை என்ற சான்று

Estimated read time 1 min read

30க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவைச் சேர்ந்த அமெச்சூர் வானொலி ஆர்வலர்கள் வானொலியின் அழைப்புக் குறி மூலம் சீனாவின் ஹூவாங்யேன் தீவுக்கு அடையாளத்தை வழங்கினர். அவர்களில் தலைமை தாங்கியவரான சென்பிங் என்பவர் கூறுகையில், 1994ஆம் ஆண்டு முதல் சீனாவின் அமெச்சூர் வானொலி விளையாட்டுச் சங்கம் அதிகாரப்பூர்வ விண்ணப்பம் தாக்கல் செய்தது. அமெரிக்க வானொலி சங்கம் ஃபிலிப்பைன்ஸ் வானொலி சங்கத்துக்கு கடிதம் எழுதி இதைக் குறிப்பிட்டது. ஹூவாங்யேன் தீவு நமது உரிமைப் பிரதேசம் இல்லை என்றும், அந்நாட்டின் உரிமைப் பிரதேச இறையாண்மையில் அடங்கவில்லை என்றும் அப்போதைய ஃபிலிப்பைன்ஸ் அரசு பதிலளித்துள்ளது. 1996ஆம் ஆண்டு ஜனவரி, ஹூவாங்யேன் தீவின் DXCC தகுதியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. BS7H எனும் அழைப்புக் குறியும் அதிகராப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவற்றில் B என்பது சீனாவின் இறையாண்மையில் இருந்ததைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. கடந்த சில பத்து ஆண்டுகளில், தென் சீனக் கடலில் ஃபிலிப்பைன்ஸ் அவதூறு செய்து ஹூவாங்யேன் தீவின் இறையாண்மையைப் பெற அடுத்தடுத்த பொய்களை உருவாக்கியுள்ளது. ஆனால், ஹூவாங்யேன் தீவு ஃபிலிப்பைன்ஸைச் சேராதது என்று ஃபிலிப்பைன்ஸ் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாக இந்த அழைப்புக் குறியின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

You May Also Like

More From Author