சீனாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய விளையாட்டு வீராங்கனை ஈஷா சிங், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
20 வயதான ஈஷா சிங், இறுதிப் போட்டியில், சீனாவின் யாவோ சியான்சுன்னை வெறும் 0.1 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்த வெற்றியைப் பதிவு செய்தார்.
இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை, ரிதம் சங்வான் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
ஈஷா சிங் இறுதிச் சுற்றில் மொத்தம் 242.6 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில், ஈஷா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஈஷா சிங் தங்கம் வென்றார்
