2026ஆம் ஆண்டு ஏபெக் வணிக ஆலோசனைக் கவுன்சிலின் (ஏபிஏசி) மூன்றாவது கூட்டம் 9ஆம் நாள் தாய்லாந்தின் பாங்காக்கில் நிறைவடைந்தது. 2026ஆம் ஆண்டு ஏபெக் தலைமை செயல் அதிகாரி உச்சிமாநாட்டின் தலைவரும், சர்வதேச வர்த்தக மேம்பாட்டிற்கான சீன கவுன்சிலின் தலைவருமான ரென் ஹோங்பின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
நான்கு நாட்கள் நீடித்த இக்கூட்டத்தில், 21 ஏபெக் பொருளாதார சமூகங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் நிபுணர்களும் கலந்துகொண்டு, பிரதேச பொருளாதார ஒருங்கிணைப்பு, தொடரவல்ல வளர்ச்சி, டிஜிட்டல் புத்தாக்கம், பரஸ்பர இணைப்பு மற்றும் தொடர்பு ஆகிய நான்கு முக்கிய துறைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இக்கூட்டத்தில் 10 முக்கிய சாதனை ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மேலும், சர்வதேச வர்த்தக மேம்பாட்டிற்கான சீன கவுன்சிலும் அமெரிக்கப் பிரதிநிதிகளும் ஆசியா-பசிபிக் விநியோக சங்கிலி ஒத்துழைப்புத் தளம் என்ற கூட்டு முன்மொழிவை உருவாக்கி, பலதரப்பு ரீதியில் இருநாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தியுள்ளனர்.
