நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Estimated read time 0 min read

நாகர்கோவில் அடுத்த திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தெப்பக்குளம் தூர்வாராமல் உள்ளது. இதனால் கடந்த 24ம் தேதி இளைஞர் ஒருவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்த இந்து முன்னணி அமைப்பினர், தெப்பக்குளத்தை விரைந்து தூர்வார வேண்டும் எனவும் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

You May Also Like

More From Author