இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நிலவிலிருந்து மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வரும் சந்திரயான் 4 திட்டத்தைச் செயல்படுத்தத் தீவிரமாக இறங்கியுள்ளது.
அக்டோபர் 2027இல் ஏவப்படவுள்ள இந்தத் திட்டம், இதுவரை எந்த நாடும் செய்யாத ஒரு சாதனையை இலக்காகக் கொண்டுள்ளது.
அதாவது, நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கி, சுமார் 3 கிலோ நிலவு மண்ணைச் சேகரித்து, மீண்டும் நிலவிலிருந்து கிளம்பி பூமிக்குக் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
இதற்காக ஐந்து வெவ்வேறு தொகுதிகளைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.
சந்திரயான்-4: ராக்கெட்டை மாற்றும் இஸ்ரோ! இந்தியாவின் மெகா திட்டத்தின் பின்னணியில் உள்ள மர்மம்
