நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாள் வீதி உலா மற்றும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்
பன்னிரண்டாம் தேதி | நடைபெறும் எட்டாம் திருவிழாவில் பால்குடம் ஊர்வலம் மற்றும் பக்தர்கள் அங்க பிரதட்சணம் ஆகிய நிகழ்ச்சிகளும் மாலையில் அகஸ்தியர்க்கு இறைவன் திருமணகாட்சியும் நடைபெறும்
விழாவிற்கான ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் அறங்காவலர் ஆதிமூலம் மற்றும் சங்கரலிங்க சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சங்கு சபாபதி ஆகியோர் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்
இதே போன்று கல்லிடைக் குறிச்சி அகத்தீஸ்வரர் கோவில் மற்றும் பாபநாசம் கோவிலிலும் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது
