நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் இன்று டிசம்பர் 18ஆம் தேதி வெளியானது.
இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 9ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகும்.
இதன் ஆடியோ வெளியீடு டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது.
அனிருத் இசையில் விஜய் பாடியிருந்த முதல் பாடல் ஏற்கனவே ஹிட் ஆன நிலையில் இரண்டாவது பாடல் விஜய்யின் துள்ளலான நடனத்துடன் மாஸ் பாடலாக இருக்கிறது.
இந்த படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, நரேன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘ஒரு பேரே வரலாறு’: ‘ஜன நாயகன்’ இரண்டாவது பாடல் வெளியானது
