இனி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை: அமைதி பேச்சுவார்த்தை முறிவு குறித்து டிரம்ப்  

Estimated read time 0 min read

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவது பற்றி தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்றும், அமெரிக்காவைப் பொறுத்தவரை தங்களுக்கு பாதிப்பில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புளோரிடாவிலிருந்து மேரிலாந்து திரும்பிய அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரான் பேச்சுவார்த்தைக்குத் திரும்புகிறதா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்கள் வராவிட்டாலும் எனக்கு சம்மதமே. என்ன நடந்தாலும் இறுதியில் அமெரிக்காவிற்கே வெற்றி” என்று குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author