சீன ஊடகக் குழுமத்தின் தலை சிறந்த திரைப்படம்
மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நிகரகுவா
ஒளிப்பரப்பு மற்றும் தலை சிறந்த திரைப்பட அறிமுகக் கூட்டம், அக்டோபர் 5ம் நாள்
காலை நிகரகுவாவின் தலைநகர் மனகுவாவில் நடைபெற்றது. ஒளிப்பரப்பப்படும் பல சிறந்த
நிகழ்ச்சிகள், சீன-நிகரகுவா பண்பாட்டுப் பரிமாற்றத்தை அதிகரித்து, இரு நாட்டு
மக்களின் நட்பை ஆழமாக்குவதற்கான முக்கிய பாலமாக மாறும்.
நிகரகுவாவுக்கான சீன துணைத் தூதர் ச்சோ யீ உரைநிகழ்த்துகையில்,
சீன-நிகரகுவா தூதாண்மையுறவு மீட்டெடுக்கப்பட்ட 4 ஆண்டுகளில், இரு நாட்டுத்
தலைவர்களின் நெடுநோக்கு தலைமையில், இரு நாட்டுறவு வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
பல்வேறு துறைகளின் நட்பு பரிமாற்றங்கள் மற்றும் ஒன்றுக்கொன்று நலன் தரும்
ஒத்துழைப்பு, முன்னேறி வந்து பல சாதனைகளைப் படைத்துள்ளன என்று தெரிவித்தார்.