துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு!

Estimated read time 1 min read

துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ராஜன் லால் சுமார் 25 வருட காத்திருப்புக்குப் பிறகு லாட்டரியில் 8 கோடி ரூபாயை வென்றுள்ளார்.

நீண்ட காலமாக துபாயில் வசிக்கும் ராஜன் லால், கடந்த ஜனவரி 30-ம் தேதி வரிப் பிடித்தம் இல்லாத மில்லினியம் மில்லியனர் குலுக்கலுக்கான லாட்டரி சீட்டை வாங்கினார்.

குலுக்கலில் 3099 என்ற எண் கொண்ட அந்த லாட்டரி சீட்டுக்கு இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வரும் தனக்கு, பல வருட விடாமுயற்சிக்குப் பிறகு பரிசு கிடைத்துள்ளதாக் ராஜன் லால் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author