உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், திங்களன்று பெரும் வன்முறையாக உருவெடுத்தது.
பல நாட்களாக அமைதியாக நடைபெற்று வந்த இந்த அறப்போராட்டம், காவல்துறை நடவடிக்கைக்குப் பிறகு கட்டுப்பாட்டை மீறிச் சென்றது, அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் கடந்த ஐந்து நாட்களாக தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
திங்களன்று தடியடி நடத்திய காவல்துறையினர், பெண் ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்களுக்குத் தீ வைத்தனர். மேலும், போலீசார் மீது சரமாரியாகக் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
நொய்டாவில் போர்க்களமான சாலைகள்! தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை
