விமான போக்குவரத்துத் துறை கடும் இழப்பு  

Estimated read time 0 min read

சர்வதேச அளவில் பிரச்சினைகள் ஏற்படும் போது முதலில் பாதிக்கப்படுவது விமானப் போக்குவரத்துத் துறை தான். அந்த வகையில் தற்போதும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினையில் விமான போக்குவரத்துத் துறையே முதலிலும் அதிகளவிலும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
மத்திய கிழக்கில் அனைத்து நாடுகளிலும் போர் பதற்றம் நிலவி வருவதால், அந்தப் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து 50% சர்வதேச விமானப் போக்குவரத்து இந்தப் பகுதியின் மூலமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
28 பிப்ரவரி முதல் 2 மார்ச் வரை, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மட்டும் சுமார் 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற விமான நிலையங்களிலும் இதே நிலையே இருக்கிறது.

You May Also Like

More From Author