நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்!

Estimated read time 1 min read

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 என்பது வியாழக்கிழமையாகும். அதன்பிறகு ஏப்ரல் 4ம் தேதி (திங்கட்கிழமை)ரிசல்ட் வெளியாக உள்ளது. தேர்தல் நாளில் ஒவ்வொருவரும் வாக்களிக்கும் வகையில் பொது விடுமுறை தினம் அறிவிக்கப்படும்.

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், ”ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கப்பட வேண்டும். இதை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author